கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று ஆரம்பம்

மாளிகைக்காடு குறூப் நிருபர்

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலார் சந்திப்பு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மண்டபத்தில் அதிபர் எம்.ஐ .ஜாபீர் தலைமையில்(10)இடம்பெற்றது.இது தொடர்பாக பாடசாலை அதிபர் கருத்து தெரிவிக்கையில்: எமது பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டிகள் ஆரம்ப விழா (11/02/2020) செவ்வாய் பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமானது.

இல்ல விளையாட்டு போட்டியின் மூலம் மாணவர்களுக்கு மத்தியில் சிறந்த புரந்துணர்வையும் தலைமைத்துவ பண்புகளை ஆளுமை விருத்தியை மேற்கொள்ளும் சந்தர்ப்பமாய் அமையும். இவ் போட்டியானது தேசிய ,சர்வதேச ரீதியாக தரம் வாய்ந்த போட்டிகள் எவ்வாறு ஒழுங்கமைக்கபடுமோ அதே போன்று சிறந்த தரத்தில் இல்ல விளையாட்டு போட்டி ஏற்ப்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

இவ் போட்டிகள் மூலம் மாணவர்கள் திறமையை வெளிக்காட்டுவதன் மூலம்

பாடசாலை ரீதியாக இடம்பெறும் வலய , மாவட்ட மட்ட,மாகாண மட்ட,தேசிய மட்ட ரீதியாக இடம்பெறும் போட்டிகளில் சிறந்த இடங்களை பெற வாய்ப்புள்ளது. அதையும் தாண்டி தேசிய அணிகள் மூலம் பிரகாசித்து சர்வதேச ரீதியாக இடம்பெறும் போட்டிகளின் எமது மாணவர்கள் கலந்து கொள்ளும் வாய்பினையும் பெரும் என்ற நம்பிக்கையுள்ளது . இல்ல விளையாட்டு போட்டிகள் எமது பாடசாலைக்கு மிகவும் பிரயோசனம் உள்ளதாய் அமைந்துள்ளது.

கடந்த முறை சர்வதேச ரீதியாக இடம்பெற்ற போட்டிகளுக்கு பாடசாலை மாண்வர்கள் சென்றதை இதன் போது நினைவூட்டினார். 4 இல்லங்களான சபா,மர்வா, ஹிரா ,அரபா ஆகிய இல்லங்கள் காணப்படுவதுடன் இவ் போட்டிகள் பழைய மாணவர்கள்,நலன் விரும்பிகள், பிராந்திய வர்த்தகர்களின், பாடசாலை அபிவிருத்தி குழு அனுசரணையில் இடம்பெறுகின்றது. பிரதி உதவி அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,விளையாட்டு குழு,உடல்கல்வி ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழு ,நலன்விரும்பிகள்,பெற்றோர்கள் ஏனைய பாடசாலை முகாமமைத்துவ குழு, ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பை பாராட்டியதுடன் விசேடமாக நன்றிகளை தெரிவித்துடன் இறுதி நாள் இல்ல விளையாட்டு போட்டிகள் எதிர்வரும் (21/02/2020) திகதி இடம்பெற தீர்மானிக்கப்பட்டுளதாக அவர் தெரிவித்தார்.

இதன் போது பாடசாலை பிரதி அதிபரும், விளையாட்டுச் சபை தவிசாளருமான எம்.எச்.எம்.அபூபக்கர், சிரேஷ்ட விளையாட்டு ஆசிரியரும் விளையாட்டுச் சபை செயலாளருமான அலியார் பைசர், பாடசாலை விளையாட்டுப் பொறுப்பதிகாரியும் போட்டிகளின் பணிப்பாளருமான கே.எம்.தமீம், பாடசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை