பலமான பொருளாதாரத்தினூடாக இரு நாடுகளின் நட்புறவு மேலும் பலமடையும்

பிரதமர் மஹிந்தவுடன் அமெ. காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான எமிபேரா மற்றும் ஜோர்ஜ் ஹோல்டிங் ஆகியோர்களுக்கிடையிலான விசேட பேச்சுவார்த்தையொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதுடன் அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தை அமைந்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரும் கருத்துத் தெரிவிக்கையில், பலமான பொருளாதாரத்தினூடாக இரு நாடுகளினதும் நட்புறவை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்வதுடன் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற சபை மற்றும் கலிபோர்னியா 7வது காங்கிரஸ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எமிபேரா வெளிநாட்டு அலுவல்கள் குழுவின் உறுப்பினராகவும் ஆசிய பசுபிக் அணுஆயுத தடை குழுவின் இணைத் தலைவராகவும் செயற்படுகின்றார். (ஸ)

 

Mon, 02/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை