வாழ்க்ைகச் செலவு அதிகரிப்பு; அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்

வாழ்க்கைச் செலவு அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எல்லையற்ற விதத்தில் கூடியுள்ள நிலையில் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் விவகாரம் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விலை பெருமளவு குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதன் பிரதிபலனை நாட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளையின் 27ன் கீழ் 2ற்கிணங்க கேள்வியெழுப்பிய அவர் மேலும் தெரிவிக்கையில்; 2019 செப்டம்பர் மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டது. இம்மாதம் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாவின் விலை 62.65 டொலரில் இருந்து 56.41ஆக குறைந்துள்ளது. பெற்றோலை 5.1 வீதத்தாலும் டீசலை 11.8 வீதத்தாலும் குறைவடைந்துள்ளது. எனினும் அதன் பிரதிபலனை அரசாங்கம் மக்களுக்கு ஏன் வழங்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

(லோரன்ஸ செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்)

Wed, 02/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை