மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட உறுதிபூணுவோம்

நாட்டின் 72ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் மலையக சமூகத்தின் மாற்றம், ஏற்றத்திற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடைவிடாது அர்ப்பணித்துச் செயற்படுமென, இ.தொ.கா தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தமது செய்தியில் மேலும் ​ெதரிவித்துள்ளதாவது:-  பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் நிரந்தர சமாதானம் மலர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். மலையகத்திலும், இந்த நாட்டின் இதர பகுதிகளிலும் வசித்து வரும் இந்திய வம்சாவளி மக்கள் உரிமைகள், சலுகைகளைப் பெறவேண்டும் என்பதே எமது அவா.

“பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு” என்பதற்கமைய எமது கட்டுக்கோப்பை மேலும் பலப்படுத்தி, இதன் வாயிலாக எமக்குரிய உரிமைகள், சலுகைகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு இந்த 72ஆவது சுதந்திர தினத்தில் நாம் திடசங்கற்பம் பூணுவோம்.

இத்தினத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் கிட்டும் என்ற திடமான நம்பிக்கையும் எமக்கு உள்ளது.அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tue, 02/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை