மாத்தளை சாஹிரா தேசிய பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி

மாத்தளை சாஹிரா தேசியப் பாடசாலையின் 52 ஆவது இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வானது 15 ஆம் திகதி கல்லூரியின் அதிபர் சித்தீக் தலைமையில் இடம்பெற்றது.இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மாத்தளை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

இந்நிகழ்வில் ஜின்னா இல்லம், ஜாயா இல்லம், இக்பால் இல்லம், அசாட் இல்லங்கள் பங்கேற்றிருந்தன. இறுதி நிகழ்வு வரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் 247 புள்ளிகளைப் பெற்று ஜாயா இல்லம் 2020 ஆம் ஆண்டுக்கான சம்பியனாக வெற்றி பெற்றதுடன், 245 புள்ளிகளைப் பெற்று இக்பால் இல்லம் இரண்டாம் இடத்தையும் தட்டிச் சென்றது. இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மாத்தளை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் அவர்களுக்கு 52 ஆவது இல்ல விளையாட்டுப் போட்டி சார்பான நினைவுச் சின்னம் ஒன்றும் கல்லூரி அதிபரால் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன், இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக சாகிர் அஹமட் விசேட அதிதியாக மசாக்கீன் முயீன் கல்வி காரியாலயம் சார்பான அதிதியாக றிழ்வான் மேலும் ஏனைய பாடசாலை அதிபர்கள், ஸாஹிராவின் பழைய அதிபர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மட்டக்களப்பு குறூப் நிருபர்

Wed, 02/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை