தினேஷ் - அந்தோனியா விட்ரோரினோ ஐ.நாவில் இருதரப்பு பேச்சுவார்த்தை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது அமர்வில் பங்கேற்கச் சென்ற வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனீவாவில் ஐ.நா. புலம்பெயர் தொழிலாளர் சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் நாயகம் அந்தோனியோ விட்ரோரினோவுடன் இருதரப்பு பேச்சுகளில் ஈடுபட்டார்.

இதன்போது வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினை கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

முக்கியமாக ஐரோப்பிய மத்திய கிழக்கு, ஜப்பான், கொரியா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் விசாப் பிரசசினைகளை தீர்த்துக்கொள்வதற்கும் சுகாதார, உயிர் பாதுகாப்பு குறித்தும், தொழில் முடிவுறும்போது கிடைக்கும் சேவைக்காலக் கொடுப்பனவை விரைவாகப் பெற்றுக்கொள்வது, சம்பள அதிகரிப்பு போன்ற பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இது தொடர்பில் இரு தரப்பு உடன்படிக்கையொன்றை செய்துகொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தமது ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக்கொள்ளும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பது குறித்தும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவை தொடர்பில் விரிவாக கலந்துரையாடி சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

Sat, 02/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை