இந்த வாரம் முதல் அரசாங்கம் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்ைக

அறுவடை செய்யப்படும் களத்திலிருந்து நேரடியாக இந்தவாரம் முதல் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

2019/20 பெரும்போகத்தின் நெல் அறுவடை தற்போது இடம்பெற்று வருகிறது. நெற் சந்தைப்படுத்தும் சபை ஏற்கனவே 423.7 மில்லியன் ரூபாவை செலவிட்டு 8474 மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார். நெற் சந்தைப்படுத்தும் சபையானது முல்லைத்தீவில் இருந்து 1462.8 மெட்ரிக் தொன் நெல்லையும் கிளிநொச்சியில் இருந்து 921.6 மெட்ரிக் தொன் நெல்லையும் கம்பஹாவில் இருந்து 26.6 மெட்ரிக் தொன் நெல்லையும் குருநாகலையில் இருந்து 210.5 மெட்ரிக் தொன் நெல்லையும் புத்தளத்தில் இருந்து 190.6 மெட்ரிக் தொன் நெல்லையும் யாழ்ப்பாணத்திலிருந்து 25 மெட்ரிக் தொன் நெல்லையும் அனுராதபுரத்திலிருந்து 384.9 மெட்ரிக் தொன் நெல் நெல்லையும்  வவுனியாவில் இருந்து 652.8 மெட்ரிக் தொன் நெல்லையும் மன்னாரில் இருந்து 895.2 மெட்ரிக் தொன் நெல்லையும் அம்பாறையில் இருந்து 1524.1 மெட்ரிக் தொன் நெல்லையும் மட்டக்களப்பிலிருந்து 2058.5 மெட்ரிக் தொன் நெல்லையும் திருகோணமலையில் இருந்து 17.7 மெட்ரிக் தொன் நெல்லையும் ஹம்பாந்தோட்டையில் இருந்து ஒரு மெட்ரிக் தொன் நெல்லையும் மொனராகலையில் இருந்து 29.6 மெட்ரிக் தொன் நெல்லையும் இரத்தினபுரியில் இருந்து 3.8 மெட்ரிக் தொன் நெல்லையும் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Wed, 02/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை