இல்ல விளையாட்டு போட்டியில் மினா இல்லம் சம்பியன்

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் இவ்வருடத்துக்கான (2020) இல்ல விளையாட்டுபோட்டியில் மினா இல்லம் 361 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது என கல்லூரி அதிபர் ஏ.எல்.கமர்டீன் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (31) மாலைஅட்டாளைச்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் சம்பியன் வெற்றிக் கிண்ணத்தை வழங்கிவைத்தார்.

இரண்டாம் இடத்தை 324 புள்ளிகளைப் பெற்று அறபா இல்லம் பெற்றுக் கொண்டது மூன்றாம் இடத்தை 318 புள்ளிகளைபெற்று சபா இல்லம் பெற்றுக் கொண்டது.

அணிநடைபோட்டியில் சபா இல்லம் முதலாம் இடம் ,உடற் பயிற்சி கண்காட்சி போட்டியில் அறபா இல்லம் முதலாம் இடம்,இல்ல அலங்கரிப்பில் சபா இல்லம் முதலாம் இடத்தையும் பெற்றது.

16,18,20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் முறையே சபா,அறபா,மினா இல்லங்கள் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டன.

இதேபோல் 16,18,20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்துபோட்டியில் முறையே அறபா,சபா,மினா இல்லங்கள் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டன.

மேலும் 17,20 வயதுகளுக்குட்பட்ட கபடிபோட்டியில் முறையே அறபா,சபா இல்லங்கள் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டன.

20 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் சபா இல்லம் சம்பியன்.

20 வயதுக்குட்பட்ட எல்லே போட்டியில் மினா இல்லம் சம்பியன்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்,அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எம்.றகுமத்துல்லா,பழைமாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள் ,நலன் விரும்பிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர்

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை