பாராளுமன்றம் இன்னும் மூன்று நாட்களுக்கு மட்டுமே கூடும்

நாட்டின் தேவையை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் நாட்டுக்கான தமது சேவையை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள தயாராக உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்னும் மூன்று நாட்களுக்கு மட்டுமே கூடும் என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் தேவைகளை கருத்திற்கொண்டு நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராக உள்ளதாகவும் தமது முழுமையான சேவையை நாட்டுக்காக பெற்றுக்கொடுக்கப் போவதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் எழுதப்பட்ட 'கரு ஜயசூரிய வாழ்க்கை சரிதை' நூல் நேற்று முன்தினம் கொழும்பு பேராயர் இல்லத்தில் வைத்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்ட கைக்கு சபாநாயகரினால் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கருஜயசூரிய,

எனது வாழ்க்கை சுயசரிதை நூலை நான் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குக் கையளித்துள்ளேன். அதனைத் தொடர்ந்து ஏனைய மதத் தலைவர்களுக்கு அவற்றை கையளிப்பதற்குத் தீர்மானித்துள்ளேன்.

நாட்டின் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டல்கள் வழங்கும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாகும் வகையில் இந்த நூலின் உள்ளடக்கம் உள்ளது. இதனை கருதினால் ஆண்டகை ஆசீர்வதித்தார்.

1990 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டின் ஜனநாயகத்திற்காக அரசியலமைப்பு திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் பேராயர் உட்பட மதத் தலைவர்களின் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் பேராயரைச் சந்தித்து எனது நூலையும் நான் கையளித்துஆசீர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை