சாய்ந்தமருது நகர சபை ஆனது; மக்கள் வெற்றிக்களிப்பு

கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கி வந்த சாய்ந்தமருது பிரதேசம்  தனியான நகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (14) வெளியிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது மக்கள் வெற்றிக்களிப்பில் பட்டாசு கொழுத்தி, பிரதான வீதியில் சென்றோருக்கு இனிப்பு வழங்கி தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

சாய்ந்தமருது நகர சபை 2022மார்ச் மாதம்  20ஆம் திகதி அமுலாகும் வகையில் 2162/50  இலக்கம்   கொண்ட அதிவிசேட வர்த்தமானி நேற்று நள்ளிரவு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின்  கையொப்பத்துடன் வெளியாகியிருந்தது.

அதற்கமைய, 2022மார்ச் 19கல்முனை மாநகர சபை கலைக்கப்படும் என்பதோடு, 2022மார்ச் 20முதல் சாய்ந்தமருது நகரசபையாக செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

(மாளிகைக்காடு குறூப் நிருபர்)

Sat, 02/15/2020 - 12:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை