ஆயுர்வேத வைத்தியத்துறையூடாக முறியடிப்பது தொடர்பில் ஆராய்வு

கொரோனா மற்றும் ஏனைய வைரஸ்கள்;

பாரம்பரிய வைத்தியர்களுடன் அமைச்சர் பவித்ரா சந்திப்பு

நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா மற்றும் ஏனைய வைரஸ்களை முறியடிப்பதற்கும் அவை பரவாமல் கட்டுப்படுத்துவதற்கும் ஆயுர்வேத மற்றும் சுதேச வைத்திய முறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு (3) சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் நாவின்ன ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள், சுதே வைத்திய துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் விலங்குகள் மூலம் பரவுகின்றன. மேலும் பல வைரஸ்கள்  இருமல், தும்மல், தொடுகை மற்றும் உபகரணங்களின் பரிமாறுதல்கள் என்பன மூலம் பரவுகின்றன. இதன் நோய் தாக்கத்திலிருந்து எவ்வாறு மீள்வது மற்றும் இதனை பரவுகையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது ஆயுர்வேத ஆணைக்குழுவின் தலைவர் டொக்டர் சத்துரங்க குமாரதுங்க, உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலமே இந்நோய் தாக்கத்திலிருந்து மீளமுடியுமென கூறினார்.

நாட்டில் உற்பத்தியாகும் உணவுகளை உண்பது, புகையடித்தல் என்பன மூலம் நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது ஊடகங்கள் இவ்வாறான நிலைமையில் எவ்வாறு செயலாற்ற வேண்டுமென்றும் கலந்துரையாடப்பட்டது. இவ்வருடம் மருந்துகளுக்காக மட்டும் 120 பில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் இது நாடு என்ற வகையில் சந்தோஷப்படக்கூடிய விடயமல்ல என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இங்கு சுட்டிக்காட்டினார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய பாரம்பரிய வைத்திய முறையில் ஆனைமடு, கல்லேவ “சுவ பியச” மருத்துவ இல்லத்தில் வசந்த விக்கிரமாராச்சி வைத்தியரால் கண்டுபிடிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட மருந்தொன்றை தி.மு.மு.திஸாநாயக்க சுகாதார அமைச்சரிடம் கையளித்தார்.

 

 

Wed, 02/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை