உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான வெற்றிக் கிண்ணம், சீருடை அறிமுகம்

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை ஆரம்பமானது. கடந்த சனிக்கிழமை மதியம் போட்டியின் கிண்ணம், மற்றும் சீருடை ஆகியவற்றின் அறிமுகம் இடம் பெற்றன.

'மன்னார் பிரிமியர் லீக்' தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளரும், மன்னார் பிரிமியர் லீக் போட்டியின் குழு தலைவருமான பி.ஞானராஜ், லீக்கின் நிர்வாக உறுப்பினப்பினர்கள், கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள், அணிகளின் உரிமையாளர்கள்,வீரர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

'மன்னார் பிரிமியர் லீக்' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் கிண்ணம், மன்னார் பிரிமியர் லீக்' உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி உரிமையாளர்கள்,முகாமையாளர்கள் அணியின் தலைவர்கள் அறிமுகம் இடம்பெற்றது.

உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் சீருடை,அணியின் சீருடை ஆகியவை வைபவ ரீதியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போட்டியின் கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

கிண்ணமானது மன்னார் நகர சபை மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக மன்னார் பஸார் பகுதியூடாக கொண்டு செல்லப்பட்டு மக்களின் பார்வைக்காக காண்பிக்கப்பட்டு மீண்டும் மன்னார் நகர சபை நோக்கி கொண்டு செல்லப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மின் ஒளியில் போட்டி கோலாகலமாக ஆரம்பமானது.

'மன்னார் பிரிமியர் லீக்' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு 10 உரிமையாளர்களினால் 10 அணிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

( மன்னார் குறூப் நிருபர்)

Tue, 02/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை