கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அணி சம்பியன்

பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் 12வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கழக அணிகளுக்கிடையே ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த லீக் முறையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி த.விவேக்சந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அணியினர் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். அத்துடன் ஆட்டநாயகனாக ஆர்.கிரிசானும், சகல துறை ஆட்டக்காரராக ஆர்.இந்துஜனும். சிறந்த பந்து வீச்சாளராக ரி.தனுசாந்தும் தெரிவானர்.

மத்திய விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட மற்றும் இளம் வீரர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட, கொரோனா வைரஸ் அணி மத்திய 360 பாகை அணி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று அணிகள் மிக கடுமையாக மோதி போட்டிகளை மிகவும் விறுவிறுப்பாக்கி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தனர்.

பெரியகல்லாற்றில் மென்பந்து கிரிக்கெட்டில் மட்டும் ஆடிவந்த வீரர்களை கடின பந்துக்கு மாற்றி, இன்று கடின பந்தில் மாவட்ட கிரிக்கெட் கழகங்களுக்கும் பாடசாலைகளுக்கம் சவால் விடுக்கம் வகையில் இந்த கிராமத்தின கிரிக்கெட் வீரர்கள் கிராமத்திற்கு பல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரித்து கொண்டுவந்து பெருமை சோத்துள்ளனர்.

அதற்கான அடி தளத்தினையும் பயிற்சிகளையும் அளித்த கழகம் என்ற வகையில் நாம் பெருமை கொள்கின்றோம். இந்த வகையில் இத்தகைய நிரிக்கற் வீரர்களின் திறமைகளை மேலும் வளர்த்தெடுக்க. இத்தகைய நட்பு ரீதியான போட்டிகள் வலுச் சேர்க்கும் என கழகத்தின் தலைவர் தெரிவித்தார்.

 கல்லாறு தினகரன் நிருபர்

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை