இ.எஸ்.பி.என். விருதுகள்: இலங்கை வீரர்கள் மாலிங்க, குசல் பெரேராவுக்கு விருது

பிரபல கிரிக்கெட் விளையாட்டு இணையதளமான இ.எஸ்.பி.என். இணையதளம், ஆண்டுதோறும் மூன்று துறைகளிலும் சிறப்பாக பங்களிக்கும் நபர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பது வழக்கம்.

இதற்கமைய கடந்த ஆண்டுக்கான விருது வென்றவர்களின் பட்டியலை இ.எஸ்.பி.என். இணையதளம், வெளியிட்டுள்ளது.

இதில் மூன்று துறைகளிலும் விளையாடும் வீரர், வீராங்கனைகள், அணிகள், நடுவர்கள் என பலருக்கும் இதன்போது விருது வழங்கப்படுகின்றது.

ஆண்டின் சிறந்த ரி-20 கிரிக்கெட் பந்துவீச்சாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளராக மேற்கிந்திய தீவுகளின் கெமார் ரோச் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளராக நியூஸிலாந்தின் மெட் ஹென்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டின் சிறந்த ரி-20 கிரிக்கெட் துடுப்பாட்ட வீரராக அவுஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரராக இலங்கை அணியின் குசல் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் தலைவராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் ரி-20 அணித்தலைவர் மோர்கன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் அறிமுக வீரராக இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் ஜொப்ரா ஆர்ச்சர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டுக்கான சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் மெக் லேன்னிங் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டுக்கான சிறந்த பந்துவீச்சாளராக அவுஸ்திரேலியாவின் எல்லீஸ் பெர்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை