நிகரகுவாவில் குடியேறிகளால் ஆறு பழங்குடியினர் கொலை

நிலப்பிரச்சினை தொடர்பில் நிகரகுவா வனப்பகுதியில் தனிமைப்பட்டு வாழும் பழங்குடியினர் ஆறு பேர் சுமார் 80 ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

பழங்குடி மயக்னா சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின்போது மேலும் 10 பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

அமெரிகாஸ் பிராந்தியத்தின் இரண்டாவது மிகப்பெரிய காடான பொசவாஸ் பியோபர் வனப்பகுதிக்குள் வசித்து வரும் பழங்குடியினர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் குடியேறிய பழங்குடி சமூகத்தைச் சேராதவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக மயக்னா தரப்பு வழங்கறிஞர் லொரி சலொமன் குறிப்பிட்டுள்ளார். நிகரகுவாவின் 6.2 மில்லியன் மக்கள் தொகையில் பழங்குடியினர் சுமார் 14 வீதமே உள்ளனர்.

நிகரகுவாவில் மலிவான, வளமான நிலங்கள், அதேபோன்று தங்கம் மற்றும் மரக்கடத்தலுக்காக பழங்குடியினர் பகுதிகளுக்கு வரும் குடியேறிகளுக்கும் பூர்வக் குடியினருக்கும் இடையே கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக மோதல்கள் வலுத்து வருகின்றன.

“இது ஒரு நிலத் தகராறு. கால்நடை வளர்ப்புக்காக அவர்களுக்கு எமது நிலம் தேவைப்படுவதோடு எமது காடுகளை அழிக்கின்றனர்்” என்று சலொமன் கூறினார்.

Sat, 02/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை