மெதுவாகும் ஐபோன்கள்: அப்பிள் மீது அபராதம்

பழைய ஐபோன் வகைகளை வேண்டுமென்றே மெதுவாகச் செயல்பட வைத்ததாக அப்பிள் நிறுவனத்திற்கு 27 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காமல் கைத்தொலைபேசிகளை மெதுவாகச் செயல்பட வைத்ததாகக்கூறி பிரான்ஸின் போட்டித்தன்மை, மோசடிக் கண்காணிப்பு அமைப்பு அபராதம் விதித்தது.

வாடிக்கையாளர்களைப் புதியரக ஐபோன்களை வாங்க வைப்பதற்காகப் பழையரகக் கைத்தொலைபேசிகளின் செயல்பாடு மெதுவடைவதாகப் பல வாடிக்கையாளர்கள் குறைகூறி வந்துள்ளனர்.

இதற்குமுன் நிறுவனம் பழைய ரகங்களின் லித்தியம் மின்கலன்களின் மின்னூட்ட ஆற்றல் நாளடைவில் குறைவது மெதுவடைவுக்குக் காரணம் என்று கூறியது.

இதனால் கைத்தொலைபேசி அடிக்கடி தானாகவே அணைந்துக்கொள்ளும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அபராதத்துடன் அப்பிள் நிறுவனம் அதன் பிரெஞ்ச் மொழி இணையப்பக்கத்தில் ஒரு மாதத்திற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிடவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை