அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி

அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (30) கல்லூரி அதிபர் திருமதி நஜீமா ஹாறுதீன் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது. ஓக்கிட், வயலட் மற்றும் டெய்சி ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையில் இரண்டு நாட்கள் நடை பெற்ற இவ் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்ச்சியின்போதுஉடற் பயிற்சிக் கண்காட்சி, அணி நடை, ஓட்டப் போட்டிகள் உட்பட பல போட்டிகள் இடம் பெற்றதோடு வெற்றி பெற்ற மாணவிகளுக்கான வெற்றி விருதுகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமணையின் திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளரும் கல்லூரியின் பி.எஸ்.ஐ.இணைப்பாளருமான ஏ.ஜி.பஸ்மில் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.கலீலுர் றஹ்மான், உடற் கல்வி உதவிப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல் ஆசிரிய ஆலோசகர்களான எம்.ஏ.சி.எம்.ஜுஹைஸ், எம்.எச்.ஹம்ஜத், முனவ்வறா கனிஷ்ட கல்லூரி அதிபர் எம்.ஐ.உவைஸ் ஆகியேர்களுடன் அதிதிகளாக பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரிய ஆசிரியைகள் அல்லப் பொறுப்பாசிரியர்கள் மற்றும்.

பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடைபெற்ற போட்டிகளில் 200 புள்ளிகளைப் பெற்று ஓர்க்கிட் இல்லம் முதலாம் இடத்தையும், 130 புள்ளிகளைப் பெற்று வயலட் இல்லம் இரண்டாம் இடத்தையும் 125 புள்ளிகளைப் பெற்று டெய்சி இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கான வெற்றி விருதுகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.பஸ்மில கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.கலீலுர் றஹ்மான் உட்பட அதிதிகள் வழங்கி வைத்தனர்.

(அக்கரைப்பற்று தினகரன் சுழற்சி நிருபர்)

Sat, 02/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை