உதைபந்தாட்டப் போட்டி: இறக்காமம் உதைபந்தாட்டக் கழகம் வெற்றி

இறக்காமம் உதைபந்தாட்டக்கழத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உதைபந்தாட்டப் போட்டி 01 ம் திகதி இறக்காமம் குளக்கரை விளையாட்டு மைதானந்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் இறக்காமம் உதைபந்தாட்டகழகமும் அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் உதைபந்தாட்டப் கழகத்திற்கும் இடையில் இடம்பெற்ற பொட்டியில் இரு அணியினரும் இடைவேளைக்கு முன்னர் எதுவிதமான கோல்களும் அடிக்காமல் இரு அணியினரும் மிகவும் சிறப்பாக விளையாடினர். இடைவேளைக்குப் பின்னர் இறக்காமம் உதைபந்தாட்ட அணியினர் 04 கோல்களை அடித்ததுடன் எதிர்கொண்ட அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் உதைபந்தாட்டக் கழகத்தினால் எந்தவிதமான கோல்களையும் அடிக்கமுடியாமல் போனது. இறக்காமம் உதைபந்தாட்ட அணிசார்பில் இமாத் 03 கோல்களும், நியாஸ் 01 கோலையும் அடித்ததனால் இறக்காமம் உதைபந்தாட்டக்கழகம் 04-0 எனும் கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது

ஹிங்குறாணை குறூப் நிருபர்

Tue, 02/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை