பொதுத் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல்

பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு இரண்டு மாத காலப்பகுதிக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மகியங்கனையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மாகாண சபைகள் செயலிழந்துள்ளன. மாகாண சபைக்கு அமைச்சரவையும் கிடை யாது.மாகாண சபையின் கீழ் மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியாதுள்ளது.

பொதுமக்களுக்கும் இதன்மூலமான சேவையை முன்னெடுக்க முடியாதுள்ளது.

நீதி அமைச்சர் என்ற ரீதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு சட்டம் ஒன்றை அமைச்சரவைக்கு கொண்டுவரவுள்ளேன்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 02/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை