நிகிதா கிரேரோ சவால் கிண்ண கிரிக்கெட் போட்டி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாணந்துறை லைசியம் சர்வதேச பாடாசலை ஏற்பாடு செய்துள்ள நிகிதா கிரேரோ சவால் கிண்ணத்திற்கான பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலைக்கும், நுகேகொடை லைசியம் சர்வதேச பாடசாலைக்கும் இடையிலான ஐந்தாவது வருடாந்த கிரிக்கெட் போட்டி நேற்று 24ம் திகதி காலை 9.00 மணிக்கு மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் ஆரம்பமானது.

நிகிதா கிரேரோ சவால் கிண்ண கிரிக்கட் போட்டியானது, லைசியல் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு பெரும் போட்டியின் தனித்துவமான அனுபவங்களை வழங்குதவற்காகவும், குழு உணர்வை ஊக்குவிப்பதற்காகவும், லைசியம் சர்வதேச பாடசாலைகள் வலையமைப்பின் பிரதான அதிகாரி நிகிதா கிரேரோவின் தூரநோக்கினை உண்மை படுத்துவதற்காகவும் 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

கிரிக்கட் இலங்கையில் எல்லா வயதினராலும் மிகவும் விரும்பப்படும் விளையாட்டாக இருப்பதோடு, மாணவர்கள் இவ்விளையாட்டில் கலந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றார்கள்.

பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலை அணிக்கு நதீப் ஜயசிங்க, லலித் பெரேரா மற்றும் பொறுப்பாசிரியர் றுமேஸ் விக்ரமசிங்க ஆகியோரின் பயிற்சி வழிகாட்டலில் இசுறு பெரேராவும், நுகேகொடை லைசியம் சர்வதேச பாடசாலை அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளர் சாமர குருகே மற்றும் பொறுப்பாசிரியர் பெத்தும் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் டனால் செனவிரத்னவும் தலைமை வகித்தார்.

லைசியம் சர்வதேச பாடசாலைகளின் விளையாட்டுத் துறை பிரதி பணிப்பாளர் சமீர பெத்தும் மற்றும், முகாமைத்துவத்தின் அனைத்து அங்கத்தவர்கள், விளையாட்டுத் துறை பிரிவுகள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதில் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் பாணந்துறை லைசியம் கிரிக்கெட் அணி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன் இப்போட்டிக்கான அனுசரணையாளர்களான சொன்டோங்க் ஸ்ரீலங்கா, மக்கீன் புக் பிரைவட் லிமிடட், அங்கிள் சாம்ஸ் கிட்ச்சன், ஸ்ட்ரெட்ஜி நிறுவனம், என்.சீ.ஜீ ஹோல்டிங்ஸ் மற்றும் நெக்ஸ்ட் க்ளிக் ஈவன்ட்ஸ் ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்காக மனமார்ந்த நன்றிகளையும் பாணந்துறை லைசியம் கிரிக்கட் அணி தெரிவித்தது.

பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலை அணி

இசுறு பெரேர (அணித் தலைவர்), நிவென் ரொட்ரிகோ (அணி உப தலைவர்), சயான் குருகே, தினேத் அமரசேகர, நெதான் லியனகே, யெனுக ராஜபக்ச, யெசித்தா களுபஹன, ருசிறு பெர்னாண்டோ, விகுசா குரே, அசித் களுபஹன, சஜாத் ஜசூக், அக்மல் பஸ்லி, தில்னகா தளுவத்தை, மனுஜ போத்பிட்டிய, துலானா பெரேரா, அபாஸ் அஹமட், சமின் பெர்னாண்டோ, தருக டி சில்வா, தருச பெரேரா, தேஜான் பீரிஸ்

நுகோகொடை லைசியம் சர்வதேச பாடசாலை அணி

தனால் செனவிரத்ன (அணித் தலைவர்), லகிந்து சச்சின் ( அணி உப தலைவர்), சதுஸ்க செனரத், ஹசிந்து பெரேரா, நுஸ்ஹான் டி சில்வா, தனுக குருசிங்க, செனுக ஹேரத், அபிலாஸ் பத்தரத்ன, தவிந்து சில்வா, ஜெனெத் தபவித்த, ஜனிது தில்வான், சஹீர் சிபான், சித்திக விக்ரமசிங்க, தினால் சிங்கபந்து.

(புத்தளம் விசேட நிருபர்)

Tue, 02/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை