தேசிய வீடமைப்பு அதிகார சபை ஒப்பந்த ஊழியர்களுக்கு மீள் நியமனம்

ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வோரை முறையான செயன்முறையின் கீழ் மீள் நியமனம் செய்ய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அறிவுறுத்தல் விடுத்திருப்பதாக வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார். 

பத்தரமுல்லையிலுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் உள்வாங்கப்பட்ட இந்தப் பணியாளர்கள் ஆதாரமற்ற செயற்பாடுகளுக்காக தன்னை இழிவுபடுத்த ஆரம்பித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

"கடந்த அரசாங்கத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதற்காக அவர்கள் சிறிகொத்த முன்னிலையிலேயே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். எனினும் அனைத்து பிரஜைகளுக்கும் தான் பொறுப்பு வகிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருப்பதனால் அவர்களை முறையான நிகழ்ச்சி நிரலின்கீழ் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் அவர் தெரிவித்தார். 

"இந்த அரசாங்கம் அரச துறையில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமையளித்துள்ளது. சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பள முரண்பாடு தொடர்பில் ஆசிரிய சங்கங்களுடனும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனைகள் விஞ்ஞாபனத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இடைக்கால கணக்கறிக்கை தடைப்பட்டதனால் எமது பல செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.இதற்காக முன்வைக்கப்படவிருந்த கணக்கு வாக்களிப்பையும் எதிர்க்கட்சியினர் தடுத்து விட்டனர்.

எனினும் எதிர்வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்," என்றார்.

Thu, 02/27/2020 - 10:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக