தெற்காசிய புகையிலை கட்டுப்பாடு; தகவல்திரட்டு இணையத்தளம் அங்குரார்ப்பணம்

தெற்காசிய புகையிலை கட்டுப்பாடு; தகவல்திரட்டு இணையத்தளம் அங்குரார்ப்பணம்-TobaccoUnmaskedSouth-Asia Website Launch

சர்வதேச மற்றும் பிராந்திய புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பிலான நிபுணத்துவ குழுவினரால் (SARC- CCT) பயிற்சிபெற்றவர்கள் உருவாக்கிய புலன் விசாரணை ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய TobaccoUnmaskedsouth.Asia தகவல் இணையத்தளம் நேற்றுமுன்தினம் கொழும்பு ஜானகி ஹோட்டலில் கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரிக்க என் விஜயரத்ன, உள்நாட்டு புகையிலை கட்டுப்பாடு தொடர்பான நலன்விரும்பிகள், பிராந்திய மற்றும் உள்ளக பங்குதாரர்கள், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த இணையத்தளம் புகையிலை தொழிற்துறையின் அவதான நிலையத்தின் (CCT)TobaccoUnmasked.lk தகவல்தளத்தை ஒத்ததாக உருவாக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய புகையிலை கட்டுப்பாடு; தகவல்திரட்டு இணையத்தளம் அங்குரார்ப்பணம்-TobaccoUnmaskedSouth-Asia Website Launch

இதன்போது ஒவ்வொரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட முடிவுகளை முன்வைத்ததோடு அதுதொடர்பான விவாதமும் இடம்பெற்றது.

சர்வதேச புகையிலை தொழில் துறை அவதான நிலையமானது (CCT) தெற்காசிய மட்டத்தில் விரிவுப்படுத்துவதற்காக (SARC-CCT) பிராந்தியக் கூட்டமைப்பை ஸ்தாபித்தது. இது தெற்காசிய பிராந்தியத்தில் புகையிலை தொழிற்துறையின் தலையீடுகள், மற்றும் நடவடிக்கைகளை கண்காணித்தல், காசநோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு எதிராக சர்வதேச ஒன்றியங்களின் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.

Sat, 02/22/2020 - 12:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை