பிரதமரின் இந்திய விஜயம் மலையக மக்களின் வாழ்வில் வெற்றியை ஏற்படுத்தும்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன் இந்தியாவுக்கான ஐந்து நாள் விஜயமானது மலையக மக்களின் வாழ்க்கைக்கு வெற்றியளிக்குமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோடு இந்தியாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர், மலையக மக்கள் தொடர்பிலான பிரச்சினைகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் ஆகியோரோடு கலந்துரையாடியுள்ளதாகவும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்தது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைச்சின் ஊடகபிரிவு,

இந்திய வம்சாவளி மக்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு மலையகத்திற்கான இந்திய அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்படவிருக்கின்ற தனி வீட்டுத்திட்டம், மலையகத்திற்கான பல்கலைக்கழகம், மலையகத்திற்கான பாடசாலை கட்டிடங்கள் மற்றும் கலாசார நிறுவனங்கள் போன்றவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

 

Mon, 02/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை