மகா சிவராத்திரி விரதம் இன்று

சிவசக்தி அம்சம் கொண்ட நாளாகப் போற்றப்படும் மஹா சிவராத்திரி விரதப் பூசை இன்று சைவ மக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவராத்திரியானது மகா சிவராத்திரி,ஜோக சிவராத்திரி, நித்தியசிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி என ஐந்து வகைப்படுகிறது. இதில் ஆண்டு தோறும் மாசி மாத தேய்பிறையில் அதாவது கிருஷ்ண பட்சத்து சதுர்த்தியில் வரும் விரதமே,மகா சிவராத்திரி விரதமாகும். இது பற்றி 27 ஆகமங்களிலும் கூறப்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் அனைத்து இந்து ஆலயங்களிலும் குறிப்பாக பனங்காடு பாசுபதீசுவரர் ஆலயம் தம்பிலுவில் சிவன் ஆலயம் காரைதீவு சிவன் ஆலயம் கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களில் இவ்விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

 

பனங்காடு தினகரன் நிருபர்

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை