மூடப்பட்டுள்ள ஓடு, காகித, செங்கல் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை

மூடப்பட்டுள்ள ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை, செங்கல் தொழிற்சாலை மற்றும் வாழைச்சேனை கடதாசி ஆலை போன்றவற்றை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,  இத்தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்ட உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.  

பரந்தன் இரசாயன நிறுவனம், காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை போன்ற அரச நிறுவனங்களையும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மீண்டும் இயங்கச்செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலையில் கொள்ளுப்பிட்டி, காலி வீதி 73/1 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் கைத்தொழில்துறையினர், தம்மை சந்திக்க முடியும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.  

இச்சந்திப்பில் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கும் அவற்றுக்கு துரிதமான தீர்வைப் பெற்றுக்கொள்ளவதற்கும் உதவும் என்றும் அமைச்சர் விமல் விரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார். 

லோறன்ஸ் செல்வநாயகம்

Tue, 02/04/2020 - 09:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை