Header Ads

ஈரான் தாக்குதலில் மேலும் அமெரிக்க வீரர்களுக்கு காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றின் மீது கடந்த ஜனவரியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்கதல்களில் அதிர்ச்சிகரமான மூளைக் காயங்களுக்கு உள்ளான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக 64 பேர் இவ்வாறு காயமடைந்ததாக பெண்டகன் கூறியதை விடவும் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். எனினும் இந்தத் தாக்குதலில் அமெரிக்கர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

ஈரான் இராணுவ ஜெனரல் ஒருவரை அமெரிக்கா படுகொலை செய்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்திற்கு மத்தியிலேயே கடந்த ஜனவரி 8 ஆம் திகதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.