இலங்கை - ஜப்பான் நட்புறவை பலப்படுத்த ஒஹ்டானி சோசன் தேரரின் பங்களிப்பு மகத்தானது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

பல தசாப்தங்கள் பழமையான ஜப்பான் - இலங்கை நட்புறவை பலப்படுத்த ஒஹ்டானி சோசன் தேரர் உள்ளிட்ட ஹோங்கான்சி மன்றத்தினால் வழங்கப்பட்ட பங்களிப்பு மகத்தானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நேற்று (18) பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜப்பான் ஹோங்கான்சி மன்றம் மற்றும் கியோட்டோவிலுள்ள ஹோங்கான்சி விகாரையின் வண. ஒஹ்டானி சோசன் தேரருக்கு 'சாசன ரத்ன' கௌரவ பட்டம் மற்றும் 'சன்னஸ்' சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நீண்ட கால வரலாறு கொண்ட ஜப்பான் ஹோங்கான்சி கலாசார மேம்பாடு மன்றம் உலகளாவிய பௌத்த சமூகத்தினரின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார தொடர்புகளை மேம்படுத்த அதிக பங்களிப்புகளை மேற்கொண்டுள்ளது. 

ஜப்பானும் இலங்கையும் பழங்காலத்திலிருந்தே கடினமான சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் முன்னின்றதாக தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ ஹோங்கான்சி மன்றத்தினால் இலங்கையில் சர்வதேச பௌத்த நூதனசாலைக்கு ஜப்பானிய அறையொன்றை வழங்கியமை தொடர்பிலும் நன்றி தெரிவித்தார்.

 

Wed, 02/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை