களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள்

களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29/01/2020 ஆம் திகதி மாலை களுத்துறை, வெட்டுமகடை, பாக்கிஸ்தான் மைதானத்தில் கல்லூரியின் புதிய அதிபர் எம்.என்.எம் நப்ராஸ் (Nafras) தலைமையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் நடைபெற்றது.

இவ் வைபவத்தின் போது களுத்துறை மாவட்டச் செயலாளர் யூ. டீ.சீ ஜயலால் பிரதம அதிதியாகவும்,களுத்துறை நகர சபைத் தலைவர் அமீர் நசீர் கௌரவ அதிதியாகவும் களுத்துறை வலய கல்வி உதவி பணிப்பாளர் எம்.ஐ.எம் இல்யாஸ் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு வைபவத்தினை மேலும் சிறப்பித்தனர்.

இதன் போது நடைப்பெற்ற 14 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் பிரிவுக்கான உதைபந்தாட்ட போட்டியில் ரோஜா இல்லமும், 16 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் தாமரை இல்லம், 20 வயதுக்கு கீழ்ப்பட பிரிவில் மல்லிகை இல்லமும் முதலிடத்தை பெற்றதுடன், திறந்த போட்டியாக நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் தாமரை இல்லம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. மேலும் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் பிரிவுக்கான கிரிக்கெட் போட்டியில் ரோஜா இல்லமும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் மல்லிகை இல்லமும் முதலிடத்தை பெற்று வெற்றி வாகை சூடின.

இப் போட்டிகளின் அடிப்படையில் 396 புள்ளிகளைப் பெற்ற மல்லிகை இல்லம் மூன்றாம் இடத்தையும் 404 புள்ளிகளைப் பெற்ற ரோஜா இல்லம் இரண்டாம் இடத்தையும் பலத்த போட்டிக்கு மத்தியில் ஒருப் புள்ளியினை மேலதிகமாக பெற்ற தாமரை இல்லம் 405 புள்ளிகளுடன் முதலாம் இடத்தையும் கைப்பற்றின.

களுத்துறை சுழற்சி நிருபர்

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை