மொபிடெல் நிறுவனத்துக்கு சிறந்த தலைவர் ரொஹான்

ஒப்சேர்வர்- – மொபிடெல் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் நிகழ்வுக்கான அனுசரணையை வழங்கும் மொபிடெல் நிறுவனத்துக்கு சிறந்ததொரு விளையாட்டு வீரரான ரொஹான் பெர்னாண்டோ தலைவராகக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

இலங்கை படகு வலித்தல் சங்கத்தின் தலைவராகவும் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் பிரதித் தலைவராகவும் இருந்த ரொஹான் பெர்னாண்டோ சென். தோமஸ் கல்லூரியின் பழைய மாணவராவார். அவரது பாடசாலை காலத்தில் சிறந்தவொரு படகு வலிக்கும் வீரரான இவர் தற்போது ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனத்தின் தலைவராக தற்போது பணியாற்றுகிறார். இந்த மொபிடெல் நிறுவனமே மேற்படி சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகளை வழங்கும் நிகழ்வுக்கு அனுசரணை வழங்குகிறது.

மொபிடெல் நிறுவனம் கடந்த 12 வருடங்களாக ஒப்சேர்வர்- மொபிடெல் சிறந்த பாடசாலை வீரர் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மொபிடெல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நளின் பெரேரா மேற்படி போட்டி நிகழ்வுக்கு வழங்கிவரும் பங்களிப்பு அளப்பரியது.

1979 இல் இந்தப் போட்டி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது முதல் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம், இலங்கை கிரிக்கெட் மத்தியஸ்தர்கள் மற்றும் ஓட்டங்களை குறிப்பிடுவோர் (ஸ்கோரர்கள்) சங்கம் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆகியோரின் நீண்டகால ஆதரவுடன், ஒப்சேர்வர்- மொபிடெல் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

1978/79 பருவ காலத்தில் இடம்பெற்ற முதலாது ஒப்சேர்வர்- மொபிடெல் சிறந்த பாடசாலை வீரர் போட்டி நிகழ்வு ஆரம்பித்து இப்போது 42 வருடங்கள் கடந்துவிட்டன. முதலாவது போட்டி நிகழ்வின் போது ரஞ்சன் மடுகல்ல சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரராகத் தெரிவானார். அன்று முதல் அவர் நீண்ட பயணமொன்றை மேற்கொண்டு என். சி. சி. அணிக்கும் அதனையடுத்து இலங்கை தேசிய அணிக்கும் தலைமை தாங்கியதுடன் தற்போது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் பிரதான போட்டித் தீர்ப்பாளராகக் கிட்டத்தட்ட இரு தசாப்தங்களாக பணியாற்றி வருகிறார்.

மிகச் சிறந்தவொரு கிரிக்கெட் வீரர் கௌரவமான அப்பதவியில் இவ்வளவு காலம் பணியாற்றுவது இலங்கைக்குக் கிடைத்துள்ள தனித்துவமான கௌரவம் ஆகும்.

சண்டே ஒப்சேர்வர் பத்திரிகைக்கு முன்னர் வழங்கிய பேட்டியொன்றின் போது நாட்டின் முன்னோடி பத்திரிகை நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனம் பாடசாலை கிரிக்கெட்டை ஊக்குவிப்பதையிட்டு அந்த நிறுவனத்துக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் திகதியன்று ரஞ்சன் மடுகல்லவுக்கு 60 வயதாகிறது. 21 டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் மொத்தம் 1029 டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் அவர் இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற 103 ஓட்டங்களே ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அவர் பெற்ற ஆகக்கூடிய ஓட்டங்களாகும். 63 ஒருநான் போட்டிகளில் விளையாட்டிய அவர் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 950 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அவரது முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இங்கிலாந்து எதிராக 65 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போட்டியில் விளையாடிய அர்ஜுன ரணதுங்க மடுகல்லவையடுத்து மற்றுமொரு அரைச்சதத்தைப் பெற்றார்.

இந்நிலையில் முதலாவது ஒப்சேர்வர்- மொபிடெல் போட்டி நிகழ்வில் சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்ற ரஞ்சன் மடுகல்ல, போட்டியின் 40வது நிகழ்வில் 2018 இல் பிரதம அதிதியாக பங்கேற்றார்.

“நான் இங்கே பிரதம அதிதியாக நிற்கும் போது எனது நினைவுகள் பின்னோக்கித் திரும்புகின்றன. நான் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்ற நினைவு இப்போதும் ஞாபகத்தில் உள்ளது.

சண்டே ஒப்செர்வர் பத்திரிகை நடத்திய அந்த நிகழ்வின் ஞாபகம் எப்போதுமே எனது மனதில் நிலையாக இருக்கும்” என்று அவரது பிரதம அதிதி உரையில் அவர் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டு. அதை விளையாடுபவரின் ஒழுக்கம் பேணப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டு விதிகளினால் ஆனது. இந்த விதிகள் நவீன கேள்விக்கு ஏற்ப மாறிவரும் போதிலும் சிதிகளுக்குள்ளேயே ஒருவர் அதனை விளையாடியாக வேண்டும். ஏனெனில் கிரிக்கெட் விளையாட்டுக்கும் அதன் விதிகளையும் விட வேறொன்றும் பெரிதல்ல.

விளையாட்டுக்கான விதிகளுக்குள் கிரிக்கெட் வளையாட்டை விளையாடும் போது வீரர்கள் தமது எதிரணியினரை மதிக்க வேண்டும். விளையாடும் அனைவருமே மனிதர்கள் எனவே வெற்றியையும் தோல்வியையும் ஒரே வகையில் எதிர்கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் இத்தனை காலம் விளையாடிய நான் அதில் என்ன கற்றுக்கொண்டேன் என்று கூறுவதனால் எதிரணியில் விளையாடுபவர்கள் எதிரணிகள் அல்ல. அவர்களும் எனது நண்பர்களே. கிரிக்கெட் விளயாட்டில் தெரிந்துகொள்ள வேண்டியது நிறையவே உள்ளது. ஒரே அணியாக விளையாடுவது மற்றும் முறையான தலைமைத்துவம் இறுதியில் வெற்றியை கொண்டு வரும் அத்துடன் ஒழுக்க மயமான உடலும் உள்ளமும் கிடைக்கும். அதுவே ஒரு வெற்றியே என்று பிரதம அதிதியாக ரஞ்சன் மடுகல்ல குறிப்பிட்ட வார்த்தைகளாகும்.

மொபிடெல் நிறுவனத்தின் ஆதரவுடன் நிகழ்வின் தரம் பதிய யுகத்தை நோக்கிச் சென்றதுடன் பணப்பரிசும் தரமான விருதுகளும் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் மட்டுமன்றி அவர்களது பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட்டுக்கு பொறுப்பான ஆசிரியர்களுக்கும் விருதும் பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை