பல தசாப்தகால சி.ஐ.ஏ உளவு விபரம் அம்பலம்

குறியாக்க நிறுவனம் ஒன்றை இரகசியமாக கட்டுப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உளவுச் சேவைகள் அரசுகளின் இரகசிய தொடர்பாடல்களை கடந்த பல தசாப்தங்களாக சேகரித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பனிப்போர் காலம் தொடக்கம் 2000ஆம் ஆண்டுகள் வரை 120க்கும் அதிகமான அரசுகளுக்கு சுவிஸ் நிறுவனமான கிறிப்டோ ஏ.ஜி. குறியாக்க சாதனங்களை வழங்கியுள்ளது.

எனினும் அந்த சாதனங்களின் மோசடியான உளவுச் செயற்பாடுகள் மூலம் குறியீடுகளை சிதைத்து செய்திகளை வாசிக்க முடியுமாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஈரான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட நாடுகளின் இரகசியங்களை சேகரிக்க முடிந்துள்ளது.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் ஜெர்மனியின் மத்திய உளவுச் சேவைக்கு இடையில் இடம்பெற்ற இந்த இரகசியத் திட்டம் பற்றிய விபரத்தை வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த உளவுச் செயற்பாடு மூலம் குறித்த சுவிஸ் நிறுவனம் பல மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது. எனினும் இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைக்காத ரஷ்யா மற்றும் சீனா அதன் சாதனங்களை பயன்படுத்தவில்லை.

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை