தனிநபர் அரசியலால் இன்று சமூக ஒற்றுமைக்கு ஆபத்து

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்

தனிநபர் அரசியல் அபிலாசைகளால் இன்று சமூகத்தின் ஒற்றுமை புறந்தள்ளப்பட்டு வருவது ஆபத்தானது. இதனால் எமக்கிருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவப் பலமும் இல்லாமல் செய்யப்பட்டு குரலற்ற ஒரு சமூகமாக மாற்றபடவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். முஸ்லிம் ஆளுமைக்கான அமையத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவும், துறைசார் சாதனையாளர்கள் மற்றும் சமூகசேவையாளர்களை தங்க விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் நேற்றுமுன்தினம் (08) அட்டாளைச்சேனையில் இம்பெற்றது.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சிறுபான்மை சமூகத்திற்கு, விகிசார முறையினால் கிடைக்கின்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவமே பலமாக இருந்து வந்தது. அதனால்தான் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து எமது உரிமைகளை ஓரளவேனும் தக்கவைத்துக்கொள்ளக் கூடியதாகவும் அமைந்திருந்தது.

தற்போதுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் மிகப்பெரிய வெற்றிடம் இந்த சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. சமூகத்தை நோக்கிய ஆபத்துக்கள் எமது ஒவ்வொருவரினதும் கதவுகளை தட்டி நிற்கின்றன. இதனை தனியே முஸ்லிம் அரசியல் கட்சிகளினால் மாத்திரம் நின்று முழு சமூகத்தின் சுமையைத் தாங்கி நிற்க முடியாது என்ற உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது.

எனவே, யதார்த்தங்களை நன்கு புரிந்துகொண்டு தனிப்பட்ட அபிலாசைகளையும், அரசியல் குரோதங்களையும் புறந்தள்ளி விட்டு ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.

(அம்பாறை சுழற்சி நிருபர்)

Mon, 02/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை