இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன்

இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத் தலைவராக வரையறுக்கப்பட்ட சிலோன் நியூஸ் பேப்பர் கம்பனி ஊடகவியலாளர் கருப்பையா ராமகிருஷ்ணன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் சதுக்க திவசன தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை விளையாட்டு மருத்துவ நிறுவனம் உள்ளகரங்கில் இடம்பெற்ற வருடாந்த பொதுக்குழு கூட்டத்தில் பிரதம அதிதியாக விளையாட்டு அமைச்சின் செயலாளர் கே . டி . றுவனச்சந்திர கலந்து சிறப்பித்தார்.

துணை தலைவராக நாமல் பத்திரகே, நெவில் அந்தனி , பாலித செனரத் யாப்பா மற்றும் குமாரி மானெல் ஆகியோர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். பொருளாளராக யோஹன் பாசுர மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார். துணை செயலாளராக சுதர்ஷன பீரிஸ் மற்றும் துணை பொருளாளராக லஹிரு துஷ்மந்த தெரிவுசெய்யப்பட்டனர்.

Thu, 02/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை