மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவம்

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவம் இன்று 15ஆம் திகதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

இன்றைய தினம் காலை 7.30 மணிக்கு கொடிச்சீலையின் திருவுலா அலங்கரிக்கப்பட்ட யானைமீது நகரவீதிகளில் நடைபெறும். திருவுலா தேவஸ்தானத்தை வந்தடைந்ததும் விசேட பூஜைகளைத் தொடர்ந்து 11.30 மணியளவில் கொடியேற்ற நிகழ்வு நடைபெறும்.

மாலை 7 மணியளவில் அம்மன் தேர் பவனி ஆலயத்திலிருந்து ஆரம்பித்து பிரதான வீதியினூடாக மந்தண்டாவலை பரமகுருசாமி மட வழிப்பிள்ளையார் ஆலயம் வரை சென்று இந்துக் கல்லூரி வீதி வழியாக களுதாவளை வீதி ஊடாக சுதுகங்கை ஸ்ரீ ஏழுமுகக் காளியம்மா கோவில் வரை சென்று மீண்டும் தேவஸ்தானத்தை வந்தடையும்.

மார்ச் 7ஆம் திகதி காலை 7 மணியளவில் சுதுகங்கை ஸ்ரீ ஏழுமுகக் காளியம்மா கோவிலிலிருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டு ஆலயத்தை வந்தடைந்ததும் தீ மிதிப்பு வைபவம் நடைபெறும்.

மார்ச் 8ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 8 மணிக்கு பஞ்சரத பவனி நடைபெறும். மார்ச் 10 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் 11ஆம் திகதி பூங்காவனத் திருவிழாவும் நடைபெறும்.

ஆலயத்தில் கொடியேற்றத் தினத்திலிருந்து பகல் அன்னதானம் வழங்கப்படும் என மேற்படி ஆலயத்தின் அறங்காவலர் அவைத் தலைவர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 

மாத்தளை சுழற்சி நிருபர்

Sat, 02/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை