சவூதி 'ரப்' பாடகியை கைதுசெய்ய உத்தரவு

மக்கா பெண்களை பாராட்டி ரப் இசை வீடியோ ஒன்றை வெளியிட்ட சவூதி அரேபிய பெண் ஒருவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

புனித நகரான மக்காவின் பெண்கள் அழகானவர்கள் மற்றும் பலம்கொண்டவர்கள் என்றும் அவர்களை “சக்கரை மிட்டாய்” என்றும் சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் வர்ணிக்கப்பட்டுள்ளது. அசயெல் ஸ்லாய் என்று தம்மை அடையாளப்படுத்திய ஒரு பெண்ணே அந்த வீடியோவில் தோன்றியுள்ளார்.

இந்நிலையில் அந்தப் பெண்ணை கைது செய்யும்படி மக்கா ஆளுநர் காலித் அல் பைசால் உத்தவிட்டுள்ளார். மக்காவின் சம்பிரதாயத்தை அவமதிப்பது போன்று அந்த வீடியோ இருப்பதாக அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

யூடியுபில் இருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டபோதும் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி உட்பட பழமைவாத போக்குடைய சவூதி அரேபியாவில் அண்மைக் காலத்தில் பல சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 02/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை