மேர்கண்டைல் டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப் சாலித, கல்பணி சிறந்த வீரர்களாக தெரிவு

இலங்கை மேர்கண்டைல் டேபிள் டென்னிஸ் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 64வது திறந்த டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப் சுற்றுப் போட்டி 2019 நவம்பர் 23 மற்றும் 24ம் திகதிகளில் இடம்பெற்றது. கல்கிஸ்ஸை சென் தோமஸ் விளையாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டிகளில் 35 நிறுவனங்களைச் சேர்ந்த 187 டேபிள் டென்னிஸ் போட்டியாளர்கள் 9 ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

மேர்கண்டைல் டேபிள் டென்னிஸ் சங்க லீக் டேபிள் டென்னிஸ் சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு விழா துண்கலாப் சொலூசன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும், இணை ஸ்தாபகருமான தம்மிக குணரத்ன, போர்ட்டுடே நிறுவனத்தின் அப்ளிகேசன் சப்போட் பிரதானி இசுறு ரணதீர ஆகியோருடன் இலங்கை மேர்கண்டைல் டேபிள் டென்னிஸ் சங்கத்தின் தலைவர் சுகித சமரகொடி, இலங்கை மேர்கண்டைல் டேபிள் டென்னிஸ் சங்கத்தின் செயலாளர் திருமதி உமாயா விண்ட்சர் மற்றும் இலங்கை மேர்கண்டைல் டேபிள் டென்னிஸ் சங்கத்தின் சுற்றுப்போட்டி தலைவர் சானக பெரேரா ஆகியோரின் பங்கு பற்றலுடன் இடம்பெற்றது.

64வது மேர்கண்டைல் டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப் - 2019 போட்டி முடிவுகள்.

ஆண்களுக்கான திறந்த போட்டி

தங்கப் பதக்கம் - சாலித ரஞ்சன - செலான் வங்கி

வெள்ளிப் பதக்கம் - ஆர். எம். எல். சத்துரங்க - சீடிபீ பினான்ஸ்

வெண்கலப் பதக்கம் - சமித அபேரத்ன - பொண்டெர்ரா

நிர்மல ஜயசிங்க - எம்.ஏ.எஸ்

பெண்களுக்கான திறந்த போட்டி

தங்கப் பதக்கம் - கல்பணி ஹேரத் - எம். ஏ. எஸ்

வெள்ளிப் பதக்கம் - ஒசாதி குணசேகர - சைன்டர் டெக்னோலோஜிஸ்

வெண்கலப் பதக்கம் - ஸ்ரீமாலி விமரத்ன - எம். ஏ. எஸ்

வினோலி சில்வா - செலான் வங்கி

ஆண்கள் இரட்டையர் போட்டி

தங்கப் பதக்கம் - நிர்மல ஜயசிங்க / சத்துர வீரகோன் - எம். ஏ. எஸ்

வெள்ளிப் பதக்கம் - சாலித ரஞ்சன / சசிக விஜேசூரிய - செலான் வங்கி

வெண்கலப் பதக்கம் - சுக்கித சமரகொடி / சமித் அபேரத்ன - போர்ட்டுடே / பொண்டொ்ரா

ஜிம்ஹான் வலிசுந்தர / சச்சிர மலிம்பதகே - எம். ஏ. எஸ்

பெண்கள் இரட்டையர் போட்டி

தங்கப் பதக்கம் - செத்திகா சசினி / வினோலி சில்வா - செலான் வங்கி

வெள்ளிப் பதக்கம் - கல்பணி ஹேரத் / ஸ்ரீமாலி விமலரத்ன - எம். ஏ. எஸ்

வெண்கலப் பதக்கம் - ஒசாதி குணசேகர / திலிணி பெரேரா - சைன்டர் / ஜோன் கீல்ஸ் IT

பிரவீனா பெரேரா / உமாயா விண்ட்சர் - இண்டர்வெஸ்ட்

சொப்ட்வெயார் டெக்னோலோஜிஸ் / சோன் 24 x 7

இரட்டையர் கலப்பு போட்டி

தங்கப் பதக்கம் - சாலித ரஞ்சன / வினோலி சில்வா - செலான் வங்கி

வெள்ளிப் பதக்கம் - நிர்மல ஜயசிங்க / கல்பணி ஹேரத் - எம். ஏ. எஸ்

வெண்கலப் பதக்கம் - செத்திகா சசினி / லக்சித சத்துரங்க - செலான் வங்கி / சீ.டி.பி

பிரவீனா பெரேரா / நெதஞ்சன் அழகப்பெரும - இண்டர்வெஸ்ட் சொப்ட்வெயார் டெக்னோலோஜிஸ்

ஆண்கள் இரண்டாம் நிலை

தங்கப் பதக்கம் - சமத் திமந்த - சீ. டி. பி. பினான்ஸ் பீஎல்சி

வெள்ளிப் பதக்கம் - சத்துர வீரகோன் - எம். ஏ. எஸ்

வெண்கலப் பதக்கம் - சுக்கித சமரகொடி - போர்ட்டுடே

தில்சாட் ஹமீட் - அமானா வங்கி பீஎல்சி

பெண்கள் இரண்டாம் நிலை

தங்கப் பதக்கம் - உமாயா விண்ட்சர் - சோன் 24x7

வெள்ளிப் பதக்கம் - உபேக்கா அனுரத்தி - கோட்ஜென் இண்டர்நெசனல்

வெண்கலப் பதக்கம் - பிரவீனா பெரேரா - இண்டர்வெஸ்ட் சொப்ட்வெயார் டெக்னோலோஜிஸ்

மனோரி பண்டார - ஹட் டெலிகொமினிகேசன்

ஆண்கள் முதுநிலை

தங்கப் பதக்கம் - சாலித ரஞ்சன - செலான் வங்கி

வெள்ளிப் பதக்கம் - நிர்மல ஜயசிங்க - எம். ஏ. எஸ்

வெண்கலப் பதக்கம் - மனுர பெர்னாண்டோ - ஏஎன்சி எடிவுகேசன்

பிரியந்த ஜயசேன - அஸ்ட்ரோன்

மூத்த ஆண்கள்

தங்கப் பதக்கம் - காமினி மொராயஸ் - அஸ்ட்ரோன்

வெள்ளிப் பதக்கம் - என். எம். திலகனந்த - சிங்கர்

வெண்கலப் பதக்கம் - ஜோய் அபேசிரிவர்தன - கொர்சியல் வங்கி

பிரியந்த காரியவசம் - கொமர்சியல் வங்கி

(புத்தளம் விசேட நிருபர்)

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை