உலகளாவிய ரீதியில் ஒழிக்க 675 மில்லியன் டொலர் தேவை

புதிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஒழிப்பது தொடர்பில் உலகளாவிய உபாயம் மற்றும் ஆரம்ப செயற்றிட்டத்துக்கு 675 மில்லியன் அமெரிக்கன் டொலர் தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்படி வைரஸ் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நாடுகளைப் பாதுகாப்பது மற்றும் அவசர உதவிகள் ஆரம்ப சிகிச்சைகளுக்காக அத்தொகை தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்படி வைரஸை தடுப்பது தொடர்பில் போதியளவு சுகாதார சேவை இல்லாத நாடுகளைப் பாதுகாப்பது, சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள், அவசர சிகிச்சைகள் மற்றும் செயற்றிட்டங்கள் ஆகியவற்றுக்கு பெப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நடைமுறைப்படுத்துவதற்காகவே மேற்படி தொகை செலவாகுமென அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 8 ஆம் திகதி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைக்கிணங்க, உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகள் 34,276 பேர் உள்ளதாக அவ்வமைப்பு உறுதிசெய்துள்ளது.

இதற்கிணங்க கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 3,419 பேர் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கைக்கிணங்க நோய் தொற்று 10.8 வீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

தொற்று ஏற்பட்டுள்ள நபர்களில் சீனர்களின் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தணிந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு அதற்கான செயற்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் எவரும் இனங்காணப்படாமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Mon, 02/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை