5 இலட்சத்திற்கும் அதிகமானோர் கடந்த 2 மாதங்களில் இடம்பெயர்வு

சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 2 மாதங்களில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி வரும் போராளிக் குழுக்களுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் தொடர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களால் இட்லிப் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கடந்த 2 மாதங்களில் 5 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவர்களில் 80 சதவீதமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐக்கிய நாடுகள் சபையின் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை