சுற்றுலா சென்று நீராடிய 4 மாணவர்கள் மூழ்கி பலி

சுற்றுலா சென்று நீராடிய 4 மாணவர்கள் மூழ்கி பலி-4-students from Badulla Hali Ela drowned to death

மேலும் மூவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்பு

திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்துக்கு குளிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த மாணவர்கள் பதுளை, ஹாலி எல பகுதியைச் சேர்ந்த வித்தியா வித்தியாலய மாணவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 10 ஜச் சேர்ந்த, மாணவ மாணவியர்கள் 89 பேர், நேற்று (19) பாடசாலையில் இருந்து புறப்பட்டு திருகோணமலை பிரதேசத்திற்கு இரு நாள் கல்விச் சுற்றுலா வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (19) பிற்பகல் மதவாச்சி பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தங்கியிருந்த குறித்த மாணவர்கள், அருகிலிருந்த மதவாச்சி குளத்தில் நீராடச் சென்றுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு நீராடிய எலி பெயர் நீரில் மூழ்கிய நிலையில், மூவர் அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள்  தற்பொழுது கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம், முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர் - அப்துல் ஹலீம்)

Thu, 02/20/2020 - 08:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை