42வது முறையாகவும் நடைபெறவுள்ள ஒப்சேவர்- மொபிடெல் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் தெரிவுப் போட்டி

இலங்கையின் மிகப் பழையதும் முன்னணி பாடசாலை கிரிக்கெட் விருது வழங்கல் நிகழ்வுமான ஒப்சேவர்- மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் போட்டி இந்த வருடமும் 42 ஆவது வருட நிகழ்வாக நடைபெறவுள்ளது. அத்துடன் பாடசாலை கிரிக்கெட் வீராங்கனை 2020 போட்டியும் அத்துடன் இணைந்ததாக மூன்றாவது வருடாந்த நிகழ்வாக இந்த முறையும் இடம்பெறுகிறது.

இப்போட்டிநிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது முதல் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மிகுந்த அக்கறையை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இது போன்ற பல பாடசலை கிரிக்கெட்தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு வரும் போதிலும் சண்டே ஒப்சேவர் வழங்கும் இந்த நிகழ்வு அனைத்துக்கும் தாய் நிகழ்வாகவே கருதப்பட்டு வருகிறது.

பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை அங்கீகரித்து பல்வேறு விருது வழங்கல் நிகழ்வுகள் இடம்பெறுவதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

இந்நிலையில் ஒப்சேர்வர் பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருது வழங்கல் நிகழ்வு 1978/79 இல் முதல் முறையாக நடந்தது. அசோசியேடட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் (லேக் ஹவுஸ் நிறுவனம்) இந்தப் போட்டி நிகழ்வை அன்று முதல் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. நாட்டின் தேசிய கைத்தொலைபேசி சேவை வழங்குனரான ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் இதற்கு அனுசரணை வழங்குகிறது.

1978/79 முதல் நான்கு தசாப்தங்களாக நடைபெற்றுவரும் ஒப்சேர்வர் பாடசாலை கிரிக்கெட் விருது வழங்கல் நிகழ்வில் ஒரு விருதை வென்றுவிட வேண்டும் என்பது அனைத்து பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் கனவாக இருந்து வருகிறது. 1978/79 இல் இந்தப் போட்டி நிகழ்வு முதன் முதல் இடம்பெற்ற போது அப்போதைய றோயல் கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த ரஞ்சன் மடுகல்ல இந்த விருதை முதல் முறையாக வென்றார்.

அன்று முதல் பல இளம் பாடசாலை வீரர்கள் வருடா வருடம் இந்த விருதை வென்று தங்கள் பாடசாலைகளுக்கு புகழ் சேர்த்து வந்துள்ளனர். இதேவேளை சண்டே ஒப்சேர்வருடன் இணைந்து கடந்த 13 வருடங்களாக மொபிடெல்லின் பிரதான நிறைவேற்று அதிகாரி நளின் பெரேராவின் அயராத முயற்சிகளின் மூலம் இந்தப் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கல் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஒப்சேர்வர்- மொபிடெல் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கல் போட்டிக்கான கூப்பன்கள் சண்டே ஒப்சேர்வர், டெய்லி நிவ்ஸ், தினமின, சிலுமின மற்றும் தினகரன் அகிய லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தேசிய பத்திரிகைகளில் வெளியாகின்றன.

எனினும் சண்டே ஒப்சேர்வர் பத்திரிகையில் வெளியாகும் கூப்படன்கள் ஒவ்வொன்றுக்கும்மூன்று வாக்குகள் கிடைகும் அதேவேளை மற்றைய பத்திரிகைகளில் வெளியாகும் ஒரு கூப்பனுக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைக்கும். சண்டே ஒப்சேர்வரில் வெளியாகும் கூப்பன்களை நிரப்பி அனுப்பினால் ஒரு கூப்பனுக்கு மூன்று வாக்குகள் கிடைக்கும் என்பதை மறக்காதீர்கள்.

Sat, 02/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை