தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டமையால் 350 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான தேயிலைதொழிற்சாலைகள் மூடப்பட்டமையால் தொழிலாளர்கள் தமது தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர்.

அரச கம்பனி தோட்ட தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல் தனியார் தோட்டதொழிற்சாலைகளும் மூடப்பட்டுவருகின்றன.

இறக்குவானை ஹொரமுல்ல தனியார் தோட்டதேயிலை கடந்த ஒரு வருடகாலமாக மூடப்பட்டுள்ளது. இதனால் இத்தோட்டத்தில் வேலைசெய்த சுமார் 350 தோட்ட தொழிலாளர்கள் தொழிலை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தேயிலை தொழிற்சாலை மூடப்பட்ட பின்னர் தோட்டத்தில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்துகளை வழங்குவதற்கு தொழிற்சாலை இன்மையால் தேயிலை தோட்ட தொழிலாளர்களும் கொழுந்து பறிப்பதனை தன்னிச்சையாக இடைநிறுத்திகொண்டனர். இதனால் சுமார் 350 பேர் தமது தொழிலை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தமது தொழில் வாய்ப்பினை இழந்த தொழிலாளர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக வேறு தோட்டங்களுக்கு தொழிலுக்காக சென்றபோதிலும் தற்போது இரத்தினபுரி மாவட்டத்தில் காணப்படும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக அத்தோட்டங்களிலும் இவர்களுக்கு வேலை வழங்க மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது. தோட்டதொழிலாளர்கள் தொழில் வாய்ப்பினை இழந்து பிறரிடம் கையேந்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமது வறுமையை போக்குவதற்கு தமக்குரிய ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியநிதி என்பனவற்றைபெறுவதற்கு இவர்கள் முயற்சி செய்தபோது அதனை உறுதிப்படுத்த தோட்ட நிர்வாகத்தை சேர்ந்த எவருமில்லையென தொழிலாளர்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் கடந்த பலவருடங்களாக தமக்குரிய ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பனவற்றை உரியமுறையில் தோட்ட நிருவாகத்தினர் செலுத்தாமல் தலைமறைவாகி விட்டதாக மேலும் தெரிவித்தனர்.

 

இரத்தினபுரி தினகரன் நிருபர்

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை