அமல் சர்வதேச பாடசாலையின் 30வது வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

அமல் சர்வதேச பாடசாலையின் 30வது வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி வியாழக்கிழமை (06) கொழும்பு-05, ஹவ்லொக் விளையாட்டு மைதானத்தில் பகல் இரவு நிகழ்வுகளாக பாடசாலையின் அதிபர் எம்.என்.எம்.றீஸா தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சி கலந்து சிறப்பித்தார்.

போட்டி நிகழ்வுகளில் சம்பியன் கேடயத்தை 287 புள்ளிகளைப் பெற்று அக்ஸா இல்லமும்இ இரண்டாம் இடத்தை 258 புள்ளிகளைப் பெற்று அறபாத் இல்லமும், மூன்றாம் இடத்தை 227 புள்ளிகளைப் பெற்று அர்கம் இல்லமும், 159 புள்ளிகளைப் பெற்று அஸீஸ் இல்லமும் வெற்றி பெற்றன.

இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவு மாலைகள், சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் பாடசாலையின் தலைவர் சட்டத்தரணி அஷ்ரப் ரூமி, பொருளாளர் எம்.ஆர்.எம்.சறூக், உள்ளிட்ட பாடசாலையின் உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை