3 தாக்குதல் சம்பவங்களில் மாலியில் 40 பேர் உயிரிழப்பு

மாலியில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஒன்பது இராணுவ வீரர்கள் உட்பட குறைந்த 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய மாலியில் கிராமம் ஒன்றில் துப்பாக்கிதாரிகள் வீடுகள், பயிர்நிலங்கள் மற்றும் கால்நடைகளை பற்றவைத்து நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

கவோ பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது இடம்பெற்ற திடீர் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மறைந்திருந்து நடத்திய மற்றொரு தாக்குதலில் எட்டு இராணுவத்தினர் பலியாகினர்.

2012 இல் நாட்டின் வடக்கில் இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களின் எழுச்சியை அடுத்து மாலியில் ஸ்திரமற்ற நிலை நீடித்து வருகிறது.

இதில் ஒகோசகு கிராமத்தின் மீதே கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை இனக் குழுவான புலானிக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் சம்பிரதாயமாக மேய்ச்சல்காரர்களாவர்.

புலானிக்கள் ஜிஹாதிக் குழுக்களுடன் தொடர்புபட்டிருப்பதாக மாலியின் ஏனைய இனக்குழுக்கள் குற்றம்சாட்டுவது அந்நாட்டில் அண்மைய ஆண்டுகளில் இனங்களுக்கு இடையிலான வன்முறையை தூண்டியுள்ளது.

இதுகுறித்து இராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “இன மோதல் காரணமாக புலானி இன மக்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டோகன் இனத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய குழு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இராணுவ தரப்பிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தன.

Mon, 02/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை