மதப் பேரணியில் தற்கொலை தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் குவாட்டா நகரில் மதப் பேரணி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டு, மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

மதப்பிரிவினை போராட்டக் குழுவுடன் தொடர்புடைய அஹ்ல் சுன்னத் வல் ஜமாத் அரசியல் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு அருகிலேயே கடந்த திங்கட்கிழமை குண்டு தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக தென்மேற்கு பலுகிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் சியா லங்கோவ் தெரிவித்துள்ளார்.

“மோட்டார் சைக்கிளில் வந்த தாக்குதல்தாரியை பொலிஸார் இடைமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்தே அவர் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்” என்று லங்கோவ் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

அஹ்ல் சுன்னத் வல் ஜமாத் தீவிர வலதுசாரி முஸ்லிம் அரசியல் கட்சி ஒன்றாகும். நாட்டில் 20 வீதமாக இருக்கும் ஷியா முஸ்லிம்களை பாகிஸ்தான் சட்டத்தில் முஸ்லிம் அல்லாதோராக பிரகடனம் செய்ய வேண்டும் என்று இவர்கள் கோரி வருகின்றனர்.

சியா முஸ்லிம்கள் மீது பாகிஸ்தான் எங்கும் குறிப்பாக குவாட்டாவில் தாக்குதல்களை நடத்திவரும் லஷ்கரே ஜங்வி ஆயுதக் குழுவுடன் இந்தக் கட்சி கூட்டுச்சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 02/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை