சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 24 வருட பூர்த்தி விழா

இலங்கையிலுள்ள 15 பல்கலைக்கழகங்களில் பத்தாவது இடத்தில் சப்ரகமுவ பல்கலைக்கழகம் இருப்பதால் அந்த நிலைமையினை மாற்றி ஏழாவது இடத்திற்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்தார்.

சப்ரகமுவ பல்கலைக்கழககத்தில் 24 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு முகாமைத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைபவத்தின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சப்ரகமுவ பல்கலைக்கழககத்தில் குறைபாடாக இருந்த வைத்திய பீடமும் தொழில்நுட்ப பீடமும் கடந்த வருடம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் 28% வீதத்தினை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு இரண்டு பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வுகள் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார்.

( பலாங்கொடை தினகரன் நிருபர்)

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை