இலங்கையுடனான டி20 போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி துடுப்பாட்ட சகலதுறை வீரரான அன்ட்ரே ரசல் அழைக்கப்பட்டுள்ளார்.

டி20 நடப்புச் சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அந்தப் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள இந்த ஆண்டு பிற்பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணத்தில் போராடவுள்ளது.

2016 உலகக் கிண்ண டி20 போட்டியில் கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற்றிருந்த 31 வயதான ரசல், கடைசியாக 50 ஓவர்கள் உலகக் கிண்ணப் போட்டியின்போதே சர்வதேச போட்டியில் ஆடியிருந்தார். 2018 ஓகஸ்ட் தொடக்கம் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியதில்லை.

போதிய உடல் தகைமையை காண்பிக்காததால் இலங்கையுடனான ஒருநாள் தொடரில் எவின் லுவிஸுடன் இடம்பெறாத ஷிம்ரோன் ஹெட்மியர் டி20 குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

அனைத்து வகை டி20 போட்டிகளிலும் 5,000 க்கு மேற்பட்ட ஓட்டங்களை பெற்றிருக்கும் ரசல் 290 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டு டி20 போட்டிகளும் கண்டியில் வரும் மார்ச் 4 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

மேற்கிந்திய தீவுகள் குழாம்:

கிரண் பொல்லார்ட் (அணித்தலைவர்), பெபியன் அலன், டுவைன் ப்ராவோ, ஷெல்டன் கொட்ரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஷேய் ஹோப், ப்ரெண்டன் கிங், நிக்கொலஸ் பூரண், ரொவ்மன் பவல், அன்ட்ரே ரசல், லெண்டில் சிம்மன்ஸ், ஒஷேன் தோமஸ், ஹெய்டன் வோல்ஸ், கெஷ்ரிக் வில்லியம்ஸ்

Mon, 02/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை