2020 ICF கிரிக்கெட் சம்பியன்ஷிப்பை வென்ற சியெட்

இந்தியா CEO Forum இலங்கையில் ஏற்பாடுசெய்திருந்த (ICF) அலுவலகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சியெட் ஸ்ரீலங்கா குழு வெற்றியீட்டியது. இதில் 24 குழுக்கள் பங்கேற்றன. சியெட் உற்பத்தி வளம்,விற்பனை,அலுவலகப் பிரிவு என்பன வற்றின் வீரர்கள் இவ்வணியில் இடம் பெற்றிருந்தனர்.

வெற்றிக் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் இவ் அணி பெயார் பெர்ஸ்ட் காப்புறுதிக் குழுவை வெற்றியீட்டியது. இவ்வணியில் இடம் பிடித்திருந்த சியெட் ஸ்ரீலங்காவின் விற்பனைப் பிரிவு நிறைவேற்று அதிகாரிகளில் ஒருவரான லக்மால் மதுஷாங்க இவ்வாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் ஆகிய விருதுகளையும் வென்று தனிப்பட்ட பெருமையையும் ஈட்டிக் கொண்டார். வெற்றிவாகை சூடிய சியெட் கிரிக்கெட் அணியை பிரதம நிதித்துறை அதிகாரி அரிந்தாம் சக்ரபார்தியும் கலந்து கொண்டார்.

Tue, 02/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை