பல்கலைக்கழக அனுமதி; 2011ஆம் ஆண்டு முறைமையை பின்பற்ற அரசு முடிவு

2019 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக 2011  ஆம் ஆண்டு பின்பற்றிய முறைமையை பின்பற்றவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

2019/2020 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் முறைமை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.  அமைச்சர் பந்துலகுணவர்தன மேலும் தெரிவிக்கையில், 

2011ஆம் ஆண்டு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் போது மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டிய முறைமை தொடர்பாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இம்முறையும் அதேபோன்று பழைய மற்றும் புதிய முறைமையில் மாணவர்கள் பரீட்சைக்கு தேற்றியுள்ள நிலையில் அந்த முறைமை பின்பற்றப்படவுள்ளது.

2019/2020 கல்வியாண்டுக்காக மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆராயும் வகையில் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. 2011 காலப்பகுதியில் இருந்த நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து அதன்படி பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். 

இதன்படி இரண்டு பிரிவுகளாக மாணவர்கள் பிரிக்கப்படவுள்ளனர். முதலாம் தடவையாக பரீட்சைக்கு தோற்றியோர் ஒரு பிரிவாகவும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவை தோற்றியோர் இன்னுமொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையில் முதன்முறையாக பரீட்சைக்கு தோற்றியோர் மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவை பரீட்சைக்கு தோற்றியோர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விகிதத்தை கணித்து மிகவும் அதிகமான மாணவர்களை உள்ளீர்க்கும் விகிதத்தை இம்முறை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.     

Thu, 02/20/2020 - 09:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை