'கொரோனா வைரஸுக்கு’ 'கோவிட்-19' என பெயர்

உலக சுகாதார நிறுவனம் 'கொரோனா வைரஸ் நோய்த் தொற்று 2019' என்பதற்கு சுருக்கமாக 'கோவிட்-19' என பெயரிட்டுள்ளது.

புதிதாக மனிதனைத் தொற்றும் நோய்க்கிருமிகளுக்கு பெயரிடும் வழக்கத்தை உலக சுகாதார நிறுவனம் நீண்டகாலமாக கொண்டுள்ளது. இதனடிப்படையிலே கடந்த டிசம்பர் முதல் சீனா உள்ளிட்ட பல நாடுகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள கொரோனா வைரசுக்கும் அந்நிறுவனம் புதிதாக பெயர் சூட்டியுள்ளது.

உலக விலங்குகள் சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் சுகாதார நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கலந்தாலோசித்த பின்னரே உலக சுகாதார நிறுவனம், 'கோவிட்-19' எனும் பெயரை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

நுண்ணங்கிகளால் புதிதாக மனிதனுக்கு ஏற்படும் தொற்று நோய்களின் பெயர்கள் காரணமாக வர்த்தகம், பயணம், சுற்றுலாத்துறை அல்லது விலங்குகள் நலன்புரி விடயங்களில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவே உலக சுகாதார நிறுவனம் நோய்களுக்கு பெயரிடும் பழக்கத்தை கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நோய்க்கிருமிகளின் பெயர்கள் காரணமாக கலாசார, சமூக,தேசிய,பிராந்திய, தொழில்சார் மற்றும் இனங்களுக்கிடையில் எச்சந்தர்ப்பத்திலும் குற்றச்சாட்டுக்கள் எழக்கூடாது என்பதும் நோய்களுக்கு சுருக்கமான பெயரிடுவதற்கு ஒரு முக்கிய காரணமென உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

லக்ஷ்மி பரசுராமன்

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை