வழங்கிய வாக்குறுதி: மார்ச் முதல் ரூ.1000 சம்பள உயர்வு நிச்சயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் 1000 ரூபா சம்பளம் உயர்வு கட்டாயம் வழங்கப்படும் என சமூக வலிவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.

இறம்பொடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஜனாதிபதி தேர்தலின்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 32 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தது. அவற்றை தற்போது நிறைவேற்றி வருகிறோம்.

மலையகத்துக்கான தனி பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. இதற்கான இடத்தை பார்வையிடுவதற்காக அடுத்தவாரம் உயர் கல்வி அமைச்சர் மலையகத்துக்கு வரவுள்ளார்.

வீடமைப்புத் திட்டமும் துரிதப்படுத்தப்படும். தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல மலையகத்தில் வாழும் வீடற்ற அனைவருக்கும் வீடுகள் கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். அதேபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் 1000 ரூபா சம்பளம் உயர்வு நிசசயம் வழங்கப்படும் என்றார்.

 

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை