STF கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது

STF கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது-4 Arrested for Disturbing STF's Duty

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உகண, லாதுகல வனப்ப பகுதியில் வெட்டப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மரங்களை STF குழுவினர் மீட்டு, உழவு இயந்திரமொன்றில் கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது, குறித்த உழவு இயந்திரம் மற்றும் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை மறித்த, மற்றொரு முச்சக்கர வண்டியில் வந்த ஒரு சிலர், அவர்களை தாக்கியதாக உகண பொலிஸில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (11) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது, அதிகாரி ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், முச்சக்கர வண்டியும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்றையதினம் (12) அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Sun, 01/12/2020 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை